கம்பராமாயணம் 5753h · சுந்தர 12.12h

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

புலித்தோலின் பலகை எல்லாம் - புலித்தோலால் ஆகிய நீண்ட கேடயங்கள் எல்லாம்; பொருகடல் புரவி என்ன - போரிடும் குதிரைக்கடல் என்று சொல்லும்படி; கலித்து ஓடி - செருக்கி மேற்சென்று; காலன் அஞ்ச - யமனும் பயப்படும்படி; உம்பரோடும் ஓடின - தேவர்கள் மேலே சென்றன; திண் சிலைகள் எல்லாம் வலித்தார் - வலிய விற்களை எல்லாம் பூட்டினார்கள்; சரத்தின் மாரி - அதிலிருந்து புறப்பட்ட அம்பு மழை; உவா ஆழி ஒலித்துற்றென்ன - பெளர்ணமி நாளிலே கடல் பொங்கிக் கிளர்ந்து மேல் எழும்பியது போல; உம்பர் தோரணத்தை முட்ட மண்டின - தேவருலகத்தில் கட்டிய தோரண வாயிலை முட்டும்படி நெருங்க.

தோலாற்செய்யப்பட்டது கேடயம் - கிடுகுபடை என்பர் பகைவர் வீசும் படைகள் தன்மேல் வீழாதபடித் தடுப்பதற்கு அமைத்திருப்பது ஆகும். அது புலித்தோலாற் செய்யப் பெறல் உண்டு போலும். படை அல்லாத கேடயமே யமனும் அஞ்சும்படி மேற்சென்றது என்று வியந்ததாம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. All the shields of tiger-skin, like a sea of fighting horses,
  2. surged proudly up and rushed even to the heavens, so that Death took fright;
  3. they drew all their strong bows; the rain of arrows pressed on,
  4. roaring like the sea at full moon, until it struck the arch of heaven.

What the poem says

The long shields covered with tiger-skin rise up like a sea of charging horses, reaching the sky and frightening even Yama, though shields are not weapons. The archers draw their bows, and the storm of arrows surges like the ocean at full moon until it strikes the gateway of heaven.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pulittōliṉ palakai ellām poru kaṭal puravi eṉṉak
kalittu ōṭi umparōṭum ōṭiṉa, kālaṉ añca;
olittu āḻi uvāvuṟṟeṉṉa umpar tōraṇattai muṭṭa,
valittār tiṇ cilaikaḷ ellām; maṇṭiṉa carattiṉ māri.