கம்பராமாயணம் 5753j · சுந்தர 12.12j

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

எண்பதினாயிரகோடி இருஞ்சிலை - எண்பதாயிரகோடிக்கணக்கான விற்களை; புண்பயில் வெஞ்சரம் பூட்டினர் - புண்ணிற் பழகிய கொடிய அம்புகளைப் பூட்டியவர்களாய் விடத் தொடங்கினர்; ஒன்றோ - அம்மட்டோ; விண்புகு தோரணம் மெல்ல மறைந்த - வானைத் தீண்டும் தோரணமானது மெல்ல மறைந்து போயிற்று; மண்புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் - உலகு ஏத்தும் புகழாளனாகிய அனுமன் பெரும் போரால் வாழ்ந்தான் ஆயினன்.

தோரணவாயில் அனுமன் இருப்பிடம் ஆதலின் அதனை மறைத்த படைப் பெருக்கம், மாறாதிருக்கும் பெருந்தீனியாய் அமைவது என்பதால் “மாருதி வாழ்ந்தான்” என்றார் போலும். ஒன்றோ - வியப்புச்சொல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Eighty thousand crores of mighty bows
  2. they strung with cruel arrows schooled in wounds; and was that all?
  3. The archway that reached the sky slowly vanished from view;
  4. Māruti, whose glory the earth praises, was in his element.

What the poem says

Intiracittu's vast army now advances on Aṉumaṉ, who has been sitting on the arched gateway of the grove he wrecked. The archers bend countless bows and loose arrows, and so many soldiers press around the archway that it disappears from sight.

Far from being alarmed, Aṉumaṉ thrives: an endless supply of foes is, as the commentary puts it, an unfailing feast for him. "Was that all?" marks the poet's wonder at the size of the host.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṇpatiṉāyira kōṭi iruñ cilai
puṇ payil veñ caram pūṭṭiṉar oṉṟō?
viṇ puku tōraṇam mella maṟainta;
maṇ pukaḻ cīrttiyaṉ māruti vāḻntāṉ.