கம்பராமாயணம் 5753n · சுந்தர 12.12n
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எங்கும் பாய்பரி பார்த்தன பார்த்தன - எல்லா இடங்களிலும் குதிரைகள் பார்க்கப் பெற்றனவாய் நிறைந்துள்ளன; திசை எங்கும் தேர்த்திரள் தேர்த்திரள் - எல்லாத் திக்குகளிலும் தேர்க் கூட்டங்களே நிறைந்துள; எங்கும் கார்த்திரள் மேனியின் இன்கயம் - எல்லா இடங்களிலும் மேகம் போன்ற கரிய உடம்புடைய இனிய யானைக்கூட்டங்களே; எங்கும் ஆர்த்தனர் மண்டும் அரக்கர்கள் - எவ்விடங்களிலும் ஆரவாரித்தவர்களாய் நெருங்கும் அரக்கர்களே.
நால்வகைச்சேனைகளின் பெருமை கூறப்பெற்றது. “பார்க்கும் இடம் எங்கும்” என்பதைப் “பார்த்தன” என்னும் அடுக்கு குறித்தது. அடுக்குகள் மிகுதி பற்றி வந்தன. கயம் - யானை. ஏ காரம் தேற்றம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Leaping horses everywhere one looked, everywhere one looked;
- masses of chariots, masses of chariots in every direction;
- everywhere fine elephants with bodies like banks of cloud;
- everywhere roaring demons crowding in.
What the poem says
The four arms of a classical army, horse, chariot, elephant and foot, fill every quarter.
The poet repeats words, "everywhere one looked, everywhere one looked" and "masses of chariots, masses of chariots," to convey their sheer abundance, and the emphatic particles insist that nothing else could be seen.