கம்பராமாயணம் 5753p · சுந்தர 12.12p
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கள்ள அரக்கனைச் சுற்றினர் காப்பார் - வஞ்சம் நிரம்பிய இந்திரசித்துவைச் சுற்றிப் பாதுகாப்பவர்; விற்படை ஓர் நூறுடை வெள்ளம் என்பார் - வில்லேந்திய படை ஓர் ஒரு நூறு வெள்ளம் எனும் கணக்கினர் ஆவர்; துள்ளிய வாட்படை சொல்லிட ஒண்ணா - துள்ளிப் பாயும் வாள் ஏந்திய படைஞர் கணக்கிட முடியாதவராம்; பொள்ளல் தரும் கரப் பூட்கையும் அஃது - துவாரம் உடைய துதிக்கையை உடைய யானைப் படையும் அதுபோலவே சொல்ல இயலாத அளவினவாகும்.
முகத்திற் பூட்டியது போன்ற கையை உடைமையால் யானைக்குப் பூட்கை என்பது பெயர். ஏ காரம் அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The bowmen, they say, numbered a hundred veḷḷam;
- the leaping swordsmen were past all telling;
- the elephants with hollow trunks were the same;
- those who guarded the wily demon stood ringed around him.
What the poem says
This is Intiracittu's personal guard, which surrounds the deceitful prince: a hundred veḷḷam of archers, and swordsmen and war elephants beyond counting.
The elephant is called pūṭkai because its trunk looks like a hand fastened to its face.