கம்பராமாயணம் 5753q · சுந்தர 12.12q
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆய பெரும்படை செல்வது கண்டு - அத்தகைய இந்திரசித்துவின் பெரியபடை செல்வதைப் பார்த்து; மாயம் மிகும் திறல் வானர வீரன் - பகைவர்க்கு மயக்கம் உண்டாக்கத்தக்க மிகுந்த வலி படைத்த குரங்கு வீரன் ஆய அனுமன்; நாயகனைத் திசை நோக்கி வணங்கி - இராமபிரானை (அவன் உள்ள) வடதிசை நோக்கி வணங்கி; மேயது ஓர் இன்பம் விளங்கிட நின்றான் - தன்னிடத்தில் உண்டாகிய மகிழ்ச்சி முகத்தில் விளங்கித் தோன்ற நின்றான். வஞ்சனைப்போர் செய்தல் அரக்கர் இயல்பு; அனுமனுக்கு இயல்பன்று ஆதலின், அனுமனின் வீரப் போர் கண்டு அரக்கர்க்கு மாயம் போல் உள்ளது என்று நினைக்குமாறு செய்யும் திறல் என உரைக்கப் பெற்றது.
அனுமனின் இராம பக்தி இங்கே தோன்றுகிறது. தன் ஆற்றலினும் இராமபக்தியே தனக்கு வெற்றி தருவது என்பதை உணர்ந்தவன் அனுமன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Seeing that great army on the march,
- the monkey hero, whose might seems like sorcery to his foes,
- bowed toward the quarter where his lord was,
- and stood with a joy that shone out of him.
What the poem says
Faced with the oncoming host, Aṉumaṉ first turns toward the north, where Irāmaṉ is, and bows; then he stands radiant with delight.
Trickery in battle is the demons' way, not Aṉumaṉ's; his "sorcery" is simply prowess so great that the demons can only take it for magic. The verse shows his devotion: he knows that his victories come from his faith in Irāmaṉ more than from his own strength.