கம்பராமாயணம் 5766 · சுந்தர 12.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இதன்முன் சில வீரரை வென்றேன் என்னும் மெய்ம்மை அன்றே - யான் இதற்கு முன் சில அரக்க வீரரை போரில் வென்றேன் என்னும் உண்மை அல்லவா; முடுகி கடிது எய்த அழைத்தது அம்மா - மிக்க விரைவாக வருமாறு (இவனை) இங்குக் கூப்பிட்டது; இனி வெல்லுதல் தோற்றல் ஒன்றே அடுப்பது உள்ளது - யான், இனி வெற்றி பெறுவது அல்லது தோற்பது என்பவற்றுள் ஒன்றே அடையக்கூடியதாகும்; இன்றே சமையும் - (அவ்விரண்டில் ஒன்று) இன்றைக்கே அமையும்; இவன் இந்திரசித்து என்பான் - இவன் இந்திரசித்து என்பவனே ஆவான்.
இந்திரசித்தின் வீரத்தைப் பற்றிக் கேள்வியுற்றதனாலும், பிராட்டியை இலங்கையில் தேடியபோது இவனை மாளிகையில் கண்டதனாலும், வருபவன் இந்திரசித்தே என்று அனுமன் தெளிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Is it not the plain fact that I have already beaten some heroes
- that has called him here, hastening fast? Ah!
- Now only one thing is left to befall me, victory or defeat;
- it will be settled this very day; this one is called Intiracittu."
What the poem says
Aṉumaṉ reasons to himself. His victories over the earlier champions have brought this warrior hurrying to the field; now it will be decided, today, whether he wins or loses.
He is sure it is Intiracittu, both from what he has heard of the prince's prowess and because he saw him in his palace while searching Ilaṅkai for Cītai.