கம்பராமாயணம் 5768 · சுந்தர 12.27

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஓன்றோ? இதனால் வரும் ஊதியம்; ஒண்மையானைக்
கொன்றேன் எனில், இந்திரனும் துயர்கோளும் நீங்கும்;
இன்றே கடிகெட்டது அரக்கர் இலங்கை மூதூர்;
வென்றேன் அவ் இராவணன் தன்னையும் வேரொடு; என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஒண்மையானை - ஒளியுற்ற இந்த இந்திரசித்தை; கொன்றேன் எனின் - நான் கொன்றேன் என்றால்; இதனால் வரும் ஊதியம் ஒன்றோ - இந்தச் செயலால் விளையக்கூடிய நன்மை ஒன்று தானோ!; இந்திரனும் துயர் கோளும் நீங்கும் அரக்கர் இலங்கை இன்றே கடி கெட்டது - இந்திரனும் துயர் கொண்டிருத்தலை நீங்கும் அரக்கர்களுடைய இலங்கை நகரம் இன்றே காவல் ஒழிந்ததாம்; அவ் இராவணன் தன்னையும் வேரொடு யானே வென்றேன் - அந்த இராவணனையும் வேரோடு நானே வென்றவனாவேன்; என்றான் - என்று (அனுமன்) எண்ணினான்.

இந்திரசித்தின் அழிவினால் ஏற்படும் நன்மைகளை அனுமன் எண்ணினான் என்பதாம். ஒண்மை - ஒளி; ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத் தோன்றுதலுடைமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Is the gain from this only one? If I kill this radiant one,
  2. Intiraṉ too will be freed from his long grief;
  3. this very day the demons' Ilaṅkai will have lost its guard; I myself
  4. will have conquered that Irāvaṇaṉ too, root and all," he said.

What the poem says

Aṉumaṉ continues counting the benefits of killing Intiracittu. Intiraṉ, king of the gods, whom the prince once defeated and humiliated, would be freed from his misery; Ilaṅkai would be left without its chief defender; and Aṉumaṉ would in effect have uprooted Irāvaṇaṉ himself.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oṉṟō? itaṉāl varum ūtiyam; oṇmaiyāṉaik
koṉṟēṉ eṉiṉ, intiraṉum tuyarkōḷum nīṅkum;
iṉṟē kaṭikeṭṭatu arakkar ilaṅkai; yāṉē
veṉṟēṉ av irāvaṇaṉ taṉṉaiyum vēroṭu; eṉṟāṉ.