கம்பராமாயணம் 5769 · சுந்தர 12.28

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அக்காலை, அரக்கரும், ஆனையும், தேரும், மாவும்,
முக்கால் உலகம் ஒரு மூன்றையும் வென்று முற்றிப்
புக்கானின் முன் புக்கு, உயர் பூசல் பெருக்கும் வேலை,
மிக்கானும், வெகுண்டு ஒர் மராமரம் கொண்டு புக்கான்.

பொருள் · Meaning in Tamil

அக்காலை - இவ்வாறு அனுமான் எண்ணிக் கொண்டு நின்றபொழுது; உலகம் ஒரு மூன்றையும் முக்கால் வென்று - மூன்று உலகங்களையும் (ஒருமுறைக்கு) மூன்று முறையாக வென்று; முற்றி புக்கானின் முன்புக்கு - எதிரில்லாமல் முடித்து இலங்கையில் வெற்றி வீரனாய்ப் புகுந்த இந்திரசித்துக்கு முன்னே வந்து; அரக்கரும், யானையும் தேரும், மாவும் - அரக்கர்களாகிய காலாட்படையும், யானை, தேர் குதிரை ஆகிய படைகளும்; உயர் பூசல் பெருக்கும் வேலை - மிக்க ஆரவாரத்தைப் பெரிதும் உண்டாக்கிய வேளையில்; மிக்கானும் - பெரியோனான அனுமனும்; வெகுண்டு ஓர் மராமரம் கொண்டு - சினம் கொண்டு, ஒரு ஆச்சாமரத்தைப் பிடுங்கி எடுத்துக் கொண்டு; மிக்கான் - (போர் செய்ய) பேருருக் கொண்டவனானான்.

இந்திரசித்து போர்க்களம் புகுதற்கு முன்பு, நால்வகைப் படைகளும் வந்து ஆரவாரம் செய்தன. அதனைக் கண்டு அனுமனும் வெகுண்டு போருக்குத் தயாரானான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment the demons, elephants, chariots and horses,
  2. going ahead of the one who had conquered the three worlds three times over and come home in triumph,
  3. surged forward, swelling the mighty din; and then
  4. the great one too, enraged, seized a marā tree and grew huge.

What the poem says

As Aṉumaṉ stands thinking, the four divisions of the army rush ahead of Intiracittu, the prince who had conquered all three worlds three times and returned to Ilaṅkai unopposed. They raise a tremendous roar.

Angered, Aṉumaṉ tears up a marā tree for a weapon and swells to an enormous size, ready to fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1akkālai, arakkarum, yāṉaiyum, tērum, māvum,
mukkāl ulakam oru mūṉṟaiyum veṉṟu muṟṟip
pukkāṉiṉ muṉ pukku, uyar pūcal perukkum vēlai,
mikkāṉum, vekuṇṭu ōr marāmaram koṇṭu mikkāṉ.