கம்பராமாயணம் 5770 · சுந்தர 12.29

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

யானை உதை உண்டன - (அரக்கர் சேனையில்) சில யானைகள் அனுமனால் உதைக்கப் பெற்றன; யானை உருண்டன - சில யானைகள் உருளப் பெற்றன; ஒன்றோ யானை மிதி உண்டன - இது மாத்திரமோ? சில யானைகள் அனுமனால் மிதிக்கப்பட்டுப் போயின; யானை விழுந்தன - சில யானைகள் கீழே விழுந்தன; யானை மேல் மேல் புதை உண்டன - சில யானைகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் புதைந்து போயின; யானை புரண்டன - சில யானைகள் முன் பின்னாகவும் கீழ் மேலாகவும் நிலை மாறின; யானை போரால் வதையுண்டன - சில யானைகள் போரில் வதைக்கப்பட்டன; யானை மண்மேல் மறிந்தன - மற்றும் சில யானைகள் அந்தப் போர்க்களத்தில் மல்லாந்து வீழ்ந்தன.

அனுமனால் யானைப்படை அழிந்தமை கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Elephants were kicked; elephants rolled; and not only that,
  2. elephants were trampled; elephants fell; one upon another
  3. elephants were buried; elephants tumbled over; in the fight
  4. elephants were slaughtered; elephants were flung on their backs on the ground.

What the poem says

The first of four verses describing Aṉumaṉ's destruction of each arm of the army, here the elephants.

The verse is built on relentless repetition, every clause ending on "elephants," so that the sound itself conveys the beasts going down one after another: kicked, rolled, trampled, buried under each other, flung on their backs.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1utaiyuṇṭaṉa yāṉai; uruṇṭaṉa yāṉai; oṉṟō,
mitiyuṇṭaṉa yāṉai; viḻuntaṉa yāṉai; mēl mēl
putaiyuṇṭaṉa yāṉai; puraṇṭaṉa yāṉai; pōrāl
vataiyuṇṭaṉa yāṉai; maṟintaṉa yāṉai maṇmēl.