கம்பராமாயணம் 5772 · சுந்தர 12.31

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சிரன் நெரிந்தவும், கண்மணி சிதைந்தவும், செறிதாள்
தரன் நெரிந்தவும், முதுகு இறச் சாய்ந்தவும், தார்பூண்
உரன் நெரிந்தவும், உதிரங்கள் உமிழ்ந்தவும், ஒண்பொன்
குரன் நெரிந்தவும், கொடுங் கழுத்து ஒடிந்தவும் குதிரை.

பொருள் · Meaning in Tamil

குதிரை சிரம் நெரிந்தவும் - (அனுமனால் அழிக்கப்பட்டு) குதிரைகள் தலை நொறுங்கிப் போயவையும்; கண்மணி சிதைந்தவும் - கண்களின் கருவிழிகள் சிதையப் பெற்றவையும்; செறிதாள் தரன் நெரிந்தவும் - வலிமை மிக்க கால்களின் தொகுதி நொறுங்கப் பெற்றவையும்; முதுகு இற சாய்ந்தவும் - முதுகு ஒடியக் கீழே சாய்ந்தவையும்; தார் பூண் உரன் நெரிந்தவும் - கிண்கிணி மாலை அணிந்த மார்பு நொறுங்கப் பெற்றவையும்; உதிரங்கள் உமிழ்ந்தவும் - இரத்தப் பெருக்குகளைக் கக்கியவையும்; ஒளிர் பொன் குரன் நெரிந்தவும் - பிரகாசமான பொற் சதங்கையை அணிந்த கால் குளம்புகள் நொறுங்கப் பெற்றவையும்; கொடும் கழுத்து ஒடிந்தவும் - வளைந்த கழுத்துக்கள் ஒடிந்தவையும் (ஆயின). குதிரைப் படை அழிந்தமை கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Horses with heads crushed, with eyeballs burst, with the strength of their sturdy legs
  2. crushed, slumped down with backs broken, with chests
  3. that wore belled garlands crushed, spewing blood, with bright gold-belled
  4. hooves crushed, with curved necks snapped: so were the horses.

What the poem says

The cavalry is destroyed in the same catalogue style: horses with heads crushed, eyes burst, legs and backs broken, chests hung with bells smashed, hooves with golden anklets shattered, and arched necks snapped, all of them spewing blood.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciraṉ nerintavum, kaṇmaṇi citaintavum, ceṟitāḷ
taraṉ nerintavum, mutuku iṟac cāyntavum, tārpūṇ
uraṉ nerintavum, utiraṅkaḷ umiḻntavum, oḷirpoṟ
kuraṉ nerintavum, koṭuṅ kaḻuttu oṭintavum kutirai.