கம்பராமாயணம் 5774 · சுந்தர 12.33

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வட்ட வெம் சிலை ஓட்டிய வாளியும் வயவர்
விட்ட வெம் திறல் படைகளும் வீரன் மேல் வீழ்ந்த
சுட்ட மெல் இரும்பு அடைகலைச் சுடுகிலாதன போல்
பட்ட பட்டன திசைதொறும் பொடி ஒடும் பரந்த.

பொருள் · Meaning in Tamil

வயவர் - அரக்க வீரர்கள்; வட்டம் வெம்சிலை - நன்கு வளைக்கப்பட்ட கொடிய விற்களினின்றும் செலுத்திய அம்புகளும்; விட்ட விட்ட வெம்படைகளும் - மற்றும் மிகுதியாகப் பிரயோகித்த கொடிய ஆயுதங்களும்; வீரன்மேல் - மகா வீரனான அனுமன் மேல்; வீழ்ந்த - விழுந்தவைகளாய்; சுட்ட வல் இரும்பு அடைகலை சுடுகலாதது போல் - நெருப்பில் காய்ந்த வலிய இரும்பு, பட்டடைக் கல்லைச் சுடாதது போல; பட்ட பட்டன திசையொடும் பொறியொடும் பரந்த - அனுமன் மேல் பட்டவை அனைத்தும் (ஓர் இடையூறும் செய்யாது) நான்கு திசைகளிலும், நெருப்புப் பொறிகளைச் சிந்தினவாய்ப் பரவிச் சென்றன.

காய்ச்சின இரும்பு, அடைகல்லை ஊறுசெய்ய மாட்டாது, தானே பொறிவிட்டுச் சிதைவுறுவதுபோல, அனுமன் மேல் விழுந்த ஆயுதங்கள், அவனை ஊறு செய்யாது சிதைந்தன என்று கூறியவாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The arrows sped from round, cruel bows and the fierce weapons
  2. the warriors hurled again and again fell upon the hero,
  3. and like red-hot iron that cannot burn the anvil stone,
  4. each one that struck flew off in all directions in a spray of sparks.

What the poem says

The demons shoot arrows and hurl weapons at Aṉumaṉ, but they do him no harm.

The image comes from the smithy: red-hot iron hammered on an anvil cannot burn the anvil and only throws off sparks. In the same way the weapons strike Aṉumaṉ and simply shatter, scattering sparks in every direction.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭṭa veñ cilai ōṭṭiya vāḷiyum vayavar
viṭṭa viṭṭa vem paṭaikaḷum vīraṉ mēl vīḻnta
cuṭṭa val irumpu aṭaikalaic cuṭukalātatu pōl
paṭṭa paṭṭaṉa ticaiyoṭum poṟiyoṭum paranta.