கம்பராமாயணம் 5775 · சுந்தர 12.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மிகை எழும் சினத்து அனுமன் மேல் - பொங்கி எழும் கோபத்தை உடைய அனுமன்மீது; இந்திர சித்து விட்டன - இந்திர சித்து (தூரத்திலிருந்து தொடுத்து) விட்டவையாகிய; சிகை எழும் சுடர் வாளிகள் - கொழுந்துவிட்டு எரியும் அம்புகள்; வெந்து புகை எழுந்தன - வெந்து புகை ளெம்பப்பெற்றவையும்; எரிந்தன கரிந்தன - எரியப்பட்டொழிந்தவையும், தீய்ந்துபோனவையுமாய்; போத - (அவன் உடலைச் சிறிதும்) ஊறுபடுத்தாதொழிய; நகை எழுந்தன - (அது கண்ட இந்திரசித்துக்குக் கோபத்தால்) சிரிப்பு உண்டாயின; வான் உளோர் நாட்டம் அழிந்தன - (இனி என்னாகுமோ என்று அஞ்சி மனம் கலங்கியதனால்) தேவர்களுடைய கண்களும் கலக்கம் அடைந்தன.
அனுமனது சினத்தச்சுடர், இந்திரசித்து வீசிய அம்புகளைச் சுட்டுப் பயனற்றவை ஆக்கின என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The blazing arrows, crested with flame, that Intiracittu
- shot at Aṉumaṉ, whose rage rose beyond all bounds, were scorched,
- smoked, burned, charred and fell away; laughter
- broke out; and the eyes of those in heaven clouded over.
What the poem says
Intiracittu now shoots his own flaming arrows, but the fire of Aṉumaṉ's anger is hotter still: the arrows smoke, burn, char and fall away without hurting him.
Intiracittu laughs in fury at the sight, and the gods watching from the sky are dismayed, fearing what will happen next.