கம்பராமாயணம் 5776 · சுந்தர 12.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தேரும், யானையும், புரவியும், அரக்கரும் சிந்தி பாரின் வீழ்தலும் - தேர்களும், யானைகளும், குதிரைகளும், அரக்கப் போர் வீரர்களும் சிதறி, தரையில் அடிபட்டு விழுந்தவுடன்; தான் ஒரு தனி நின்ற - தான் ஒருவன் மாத்திரமே தன்னந்தனியாய் எஞ்சி நின்ற; பணை தோள் வீரர் வீரனும் - பருத்த தோள்களை உடைய மகாவீரனாகிய இந்திரசித்தும்; முறுவலும் வெகுளியும் வீங்க - புன் சிரிப்பும் கோபமும் அதிகரிக்க; வாரும் வாரும் என்று அழைக்கின்ற அனுமன் மேல் வந்தான் - வாருங்கள் வாருங்கள் என்று மேன்மேலும் உற்சாகத்தோடு கூப்பிடுகின்ற அனுமன்மீது எதிர்த்துப் போரிட வந்தான்.
வாரும் வாரும் என்பது இகழ்ச்சிக் குறிப்பு. இகழ்ச்சியுடன் அழைத்த அனுமனுடன் போர் செய்ய வந்தான் இந்திரசித்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When chariots, elephants, horses and demons were scattered
- and fell to the ground, he who was left standing alone, the broad-shouldered
- hero of heroes, his smile and his anger swelling,
- came on against Aṉumaṉ, who kept calling, "Come on, come on!"
What the poem says
With his whole army lying on the ground, Intiracittu is left alone. His mocking smile and his anger both grow as he advances on Aṉumaṉ.
Aṉumaṉ keeps calling "Come on, come on!", a taunt meant as an insult, and Intiracittu takes up the challenge.