கம்பராமாயணம் 5777 · சுந்தர 12.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புரந்தரன் தலை பொதிர் எறிந்திட - இந்திரன் தலைநடுக்கம் மேலிடவும்; வானில் பரந்த புயல் பல் உரும் ஏற்று இனம் - ஆகாயத்தில் பரந்து விளங்கிய மேகங்களில் உள்ள பல பெரிய இடிகளின் கூட்டம்; வெறித்து உயிர் பதைப்ப - அச்சத்தால் மயக்கம் கொண்டு உயிர் நடுங்கவும்; நிரந்தரம் புவி முழுவதும் சுமந்த நீடு உரகன் - எப்போதும் உலகம் முழுவதையும் தாங்கிக் கொண்டுள்ள நீண்ட பாம்பாகிய ஆதிசேடன்; சிரம் துளங்கிட - தன் ஆயிரம் தலைகளும் அச்சத்தால் நடுங்கவும்; அரக்கன் வெஞ்சிலையை நாண் தெறித்தான் - அரக்கனாகிய இந்திரசித்து, தன் வில்லின் கொடிய நாணைக் கை விரலால் தெறித்து ஒலி எழுப்பினான்.
இந்திரசித்து தனது வில்லின் நாணைத் தெறித்த போது, அச்சத்தால் நடுங்கிய பிறரது நடுக்கம் கூறப்பட்டது. பொதிர் - நடுக்கம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that Purantaraṉ's head shook with tremors, and the many herds of thunder
- spread through the clouds in the sky were stunned and trembled for their lives,
- and the long serpent who for ever bears the whole earth
- shook in his heads, the demon twanged the string of his cruel bow.
What the poem says
Intiracittu plucks his bowstring, and its sound terrifies the universe. Intiraṉ, called Purantaraṉ here, who knows that sound all too well, shakes; the thunderclaps in the clouds tremble; and Ātiśēṣaṉ, the thousand-headed serpent who holds up the world, shudders in every head.