கம்பராமாயணம் 5778 · சுந்தர 12.37
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஆண்ட நாயகன் - (எல்லா உயிர்களையும்) அடிமை கொண்டருளும் (திருமாலின் அவதாரமாகிய) இராமபிரானின் தூதனும் - தூதனான அனுமனும்; அயனுடை அண்டம் கீண்டதாம் என - (அவ்வொலிக்கு எதிராக) பிரம்மாண்டமே பிளந்தது என்று சொல்லும்படியாகவும்; கிரி உக - மலைகள் பொடியாய்ச் சிந்தும்படியாகவும்; நெடும் நிலம் கிழிய - நீண்ட பூமி பிளக்கும் படியும்; நீண்ட மாதிரம் வெடிபட - நெடிய திசைகள் பிளவுபடவும்; அவன் நெடுஞ்சிலையில் பூண்ட நாண் இற - இந்திர சித்தினது நீண்ட வில்லில் பூட்டிய நாண் அற்றுப் போகவும்; தன் நெடுந்தோள் புடைத்து ஆர்த்தான் - தனது நெடிய தோள்களைக் கொட்டிக் கர்ச்சனை செய்தான். இந்திரசித்து, முன் எழுப்பிய ஒலிக்குக் கருவியாயிருந்த நாணும் அறும்படி இருந்தது, அனுமன் தோள் புடைத்து ஆர்த்த ஒலி என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- And the envoy of the Lord who rules us all, so that Ayaṉ's cosmic egg
- seemed to split, so that mountains crumbled and the wide earth was torn,
- so that the far quarters burst apart, and the string fastened on that one's long bow
- snapped, slapped his own long shoulders and roared.
What the poem says
Aṉumaṉ, envoy of Irāmaṉ, answers the twang of the bow with a roar of his own, slapping his huge shoulders. The noise seems to crack open the cosmic egg created by Brahmā, called Ayaṉ, to shatter mountains and split the earth and the sky.
It is so loud that it snaps the very bowstring whose sound had just terrified the universe, outdoing Intiracittu's challenge completely.