கம்பராமாயணம் 5779 · சுந்தர 12.38
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
நல்லை நல்லை - நீ மிகவும் சாமர்த்தியம் உள்ளவன்; இஞ் ஞாலத்துள் நின் ஒக்க நல்லார் இல்லை இல்லை - இந்த உலகத்தில் உனக்குச் சமமான சமர்த்தர்கள் யாரும் இல்லை; எறுழ்வலிக்கு - மிக்க வலிமைத் திறத்தில்; யாரொடும் இகல வல்லை வல்லை - நீ எல்லோருடனும் மாறுபடுதற்கு மிகவும் வல்லவன்; நீ படைத்துள வாழ் நாட்கு எல்லை எல்லை இன்று ஆகும் - நீ அடைந்துள்ள உன் வாழ் நாளுக்கு இன்றே முடிவு எல்லையாக அமையும்; என்று - என்று சொல்லி; இந்திர சித்துவும் இசைத்தான் - இந்திரசித்தும் (இகழ்ந்து தன் வீரம் தோன்றப் பெருமிதத்தோடு) கூறினான். பிறரோடு வைத்து நோக்குமிடத்து நீ ஒப்புயர்வற்ற வீரன் என விளங்குவையாயினும், நான் உன்னை இன்றைக்குக் கொன்று விடுவேன் என்று, அனுமனை நோக்கி இந்திரசித்து வீரவாதம் கூறினான் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Well done, well done! In this world there is none, none
- as good as you; in sheer might you are able, able
- to stand against anyone; but today will be the end, the end
- of the span of life you were granted," said Intiracittu in his turn.
What the poem says
Intiracittu replies with a warrior's boast. He grants that Aṉumaṉ has no equal among other fighters and can take on anyone, but declares that this day will be the last of his life.
Each line doubles a word, "well done, well done," "none, none," "able, able," "the end, the end," giving the speech a mocking, ringing swagger.