கம்பராமாயணம் 5781 · சுந்தர 12.40

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1"இச் சிரத்தையைத் தொலைப்பென்"என்று இந்திரன் பகைஞன்,
பச்சிரத்தம் வந்து ஒழுகிட, வானவர் பதைப்ப,
வச்சிரத்திலும் வலியன வயிர வான் கணைகள்,
அச் சிரத்திலும், மார்பிலும், செறித்தலும், அனுமன்,

பொருள் · Meaning in Tamil

இந்திரன் பகைஞன் - (அது கேட்டு) இந்திரசித்து; “இ சிரத்தையை தொலைப்பென்” என்று - (இந்தக் குரங்கின்) இந்த நம்பிக்கையை அழித்துவிடுவேன் என்று கருதி; அச்சிரத்தினும் மார்பினும் - அந்த அனுமனுடைய தலையிலும் மார்பிலும்; பச்சு இரத்தம் வந்து ஒழுகிட - புதிய இரத்தம் வந்து ஒழுகும்படியும்; வானவர் பதைப்ப - (அது கண்டு) தேவர்கள் துடிக்கும்படியாகவும்; வச்சிரத்தினும் வலியன வயிரவான் கணைகள் - வச்சிராயுதத்தைக் காட்டிலும் வலிமை உடையனவான கூர்மையான பெரிய அம்புகளை; அழுத்தலும் - அழுந்த எய்த போது; அனுமன் - நெடுஞ்சினங் கொண்டு நிமிர்ந்தான் என அடுத்த கவியோடு முடியும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "I will put an end to this confidence," thought Intiraṉ's enemy,
  2. and so that fresh blood streamed and the gods trembled,
  3. he drove great, keen arrows, stronger than the thunderbolt,
  4. deep into that head and that chest; and Aṉumaṉ,

What the poem says

Stung by the reply, Intiracittu resolves to crush the monkey's self-assurance. He fires arrows harder than Intiraṉ's thunderbolt into Aṉumaṉ's head and chest, drawing fresh blood, and the gods watching are alarmed.

The verse breaks off at Aṉumaṉ's name; his response follows in the next verse.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1"ic cirattaiyait tolaippeṉ"eṉṟu intiraṉ pakaiñaṉ,
paccirattam vantu oḻukiṭa, vāṉavar pataippa,
vaccirattiṉum valiyaṉa vayira vāṉ kaṇaikaḷ,
ac cirattiṉum, mārpiṉum, aḻuttalum, aṉumaṉ,