கம்பராமாயணம் 5785 · சுந்தர 12.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அவண் - அந்நிலையில்; ஊழிக் காற்று அன்ன ஒரு பரி தேர் உதவ - ஊழிக்காலத்தில் வீசும் பெருங்காற்றுப் போல (வேகமாகச் செல்லும்) குதிரைகள் பூட்டிய ஒரு தேரை (வேறு ஒரு சாரதி) கொண்டு வந்து தர; பாழி தோளவன் - பருத்த தோள்களை உடைய அந்த இந்திரசித்து; அத்தடம் தேர் மிசை பாய்ந்தான் - அந்தத் தேரின் மீது பாய்ந்து ஏறி; பல் ஆழி படை அனையன அளப்ப அரும் சரத்தால் - பல சக்கராயுதம் போன்ற அளவிட்டுச் சொல்ல முடியாத அம்புகளால்; வாழி போர் வலி மாருதி மேனியை மறைத்தான் - நீடூழி வாழ்பவனும், போர் வலிமையிற் சிறந்தவனுமான அனுமனது திரு மேனியை மூடி மறைத்துவிட்டான்.
அனுமனது உடம்பு மறையும் படி மிகுதியாக அம்புகளை இந்திரசித்து எய்தான் என்பதாம். பாழி - பெருமையும் ஆம்; ஆழி - சக்கராயுதம்; கடலும் ஆம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When a chariot drawn by horses like the wind at the end of an age was brought to him there,
- he of massive shoulders leapt up onto that great chariot,
- and with countless arrows like so many discus weapons
- he hid the body of Māruti, long may he live, mighty in war.
What the poem says
Another chariot is brought, its horses as swift as the gale that blows at the end of the world, and Intiracittu leaps into it.
He shoots so many arrows, each like Viṣṇu's discus, that Aṉumaṉ's body is completely covered by them. The commentary notes the word for "discus" can also mean "sea," suggesting arrows as countless as the ocean's waves.