கம்பராமாயணம் 5786 · சுந்தர 12.45

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1உற்ற வாளிகள் உரத்து அடங்கின உக உதறாக்
கொற்ற மாருதி மற்று அவன் தேர்மிசைக் குதித்தான்;
பற்றி வன்கையால் பறித்து எறிந்து உலகு எலாம் பலகால்
முற்றி வென்ற ஓர் மூரி வெம் சிலையினை முறித்தான்.

பொருள் · Meaning in Tamil

கொற்ற மாருதி - வெற்றியை உடைய அனுமன்; உற்ற உரத்து அடங்கின வாளிகள் - வந்து பட்டவையாய் மார்பில் பதிந்தவைகளான (இந்திரசித்தின்) அம்புகள் அனைத்தும்; உக உதறா - கீழே சிந்தும்படி உதறித் தள்ளிவிட்டு; அவன் தேர் மிசை குதித்து - இந்திரசித்துவின் தேரின்மேல் எழும்பிப் பாய்ந்து; உலகு எலாம் பல கால் முற்றி வென்ற போர்மூரி வெம் சிலையினை - உலகும் யாவையும் பல முறை முழுவதும் வென்றதான போரில் சிறந்த அவனது வலிய வில்லினை; வன் கையால் பற்றி - தனது வலிய கையினால் பிடித்து; பறித்து எழுந்து முறித்தான் - பிடுங்கிக் கொண்டு வெளியே வந்து ஒடித்தெறித்துவிட்டான்.

அனுமன் ஆற்றல் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Shaking off the arrows that had struck and sunk into his chest, so that they dropped away,
  2. victorious Māruti leapt onto the other's chariot,
  3. seized it in his strong hand, wrenched it away and, rising, the great cruel bow
  4. that had conquered all the worlds completely many times, he broke.

What the poem says

Aṉumaṉ shrugs off the arrows buried in his chest, jumps onto Intiracittu's chariot, tears from his hand the bow that had conquered every world many times over, and snaps it in two.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟṟa vāḷikaḷ urattu aṭaṅkiṉa uka utaṟā
koṟṟa māruti maṟṟavaṉ tērmicaik kutittu;
paṟṟi vaṉkaiyāl paṟittu eḻuntu ulaku elām palakāl
muṟṟi veṉṟa pōr mūri veñ cilaiyiṉai muṟittāṉ.