கம்பராமாயணம் 5787 · சுந்தர 12.46

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னம்,
மறிந்துபோர் இடை வழிக் கொள்வான், வயிர வாள் படையால்
செறிந்த வான் பெரும் சிறை அற மலைகளைச் செயிரா
எறிந்த இந்திரன் இட்ட, வான் சிலையினை எடுத்தான்.

பொருள் · Meaning in Tamil

முறிந்த வில்லின் வல் ஓசை போய் முடிவதன் முன்னர் - ஒடிபட்ட அந்த வில்லின் வலிய ஓசை அடங்குவதற்கு முன்னே, (இந்திரசித்து); போரிடை மறிந்து வழிக் கொள்வான் - போரை மீண்டும் தொடர வேண்டி; வயிர வாள் படையால் - வச்சிராயுதம் என்னும் வாளால்; செறிந்த வான் பெரு மலைகளை - அடர்ந்த மிகப்பெரிய மலைகளை; சிறகு அற செயிரா எறிந்த இந்திரன் - இறகுகள் அற்றுப் போகும் படி சினங் கொண்டு துணித்தவனான தேவேந்திரன்; இட்ட வான்சிலையினை எடுத்தான் - திறையாகக் கொடுத்த பெரிய வில்லைக் கையில் எடுத்துக் கொண்டான்.

அந்த வில் ஒடிந்தவுடனே வேறு ஒரு வில்லை எடுத்துக் கொண்டான் இந்திரசித்து. அது, இந்திரன் தனது தோல்விக்குப் பிறகு, திறையாக இந்திரசித்துக்குக் கொடுத்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before the loud crack of the broken bow had died away,
  2. turning back into the fight to carry it on, he, of the one who with his diamond blade
  3. in anger cut away the wings of the great, massed mountains,
  4. Intiraṉ, took up the mighty bow he had given.

What the poem says

Before the sound of the breaking bow has even faded, Intiracittu takes up another to continue the fight. This one was given to him as tribute by Intiraṉ after his defeat.

Intiraṉ is recalled here as the god who, in myth, cut off the wings of the once-flying mountains with his thunderbolt.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muṟinta villiṉ val ōcai pōy muṭivataṉ muṉṉar,
maṟintupōriṭai vaḻik koḷvāṉ, vayira vāṭ paṭaiyāl
ceṟinta vāṉ peru malaikaḷaic ciṟaku aṟac ceyirā
eṟinta intiraṉ iṭṭa, vāṉ cilaiyiṉai eṭuttāṉ.