கம்பராமாயணம் 5788 · சுந்தர 12.47

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1நூறுநூறு போர் வாளி, ஓர் தொடை கொண்டு, நொய்தின்,
மாறு வெம் சினத்து இராவணன் மகன், சிலை வளைத்தான்;
ஊறு, தன் நெடு மேனியில் பல பட, ஒல்கி,
ஏறு சேவகன் தூதனும், சிறிது போது இருந்தான்.

பொருள் · Meaning in Tamil

மாறு இல் வெம்சினத்து இராவணன் மகன் - எதிர் இல்லாத கொடிய கோபத்தை உடைய இராவணனது மகனான இந்திரசித்து; போர்வாளி நூறுநூறு ஓர் தொடை கொடு - போரிற் சிறந்த நூறு நூறு அம்புகளை ஒரு தொடுப்பிலே கொண்டு; நொய்தின் சிலை வளைத்தான் - விரைவில், அவ்வில்லை வளைத்து எய்தான்; ஏறு சேவகன் தூதனும் - சிறந்த வீரனாகிய இராமபிரானுடைய தூதனான அனுமனும்; தன் நெடு மேனியில் ஊறு பலபட - (அந்த அம்புகளால்) தனது பெரிய உடம்பில் பல புண்கள் உண்டாக; சிறிது போது ஒல்கி இருந்தான் - சிறிது நேரம் தளர்ச்சியுற்றிருந்தான்.

ஏறு சேவகன்; “ஏறுசேவகனார்” - (திருவாய்மொழி 0.1.9) பகைவர் திரளிலும் ஏறிய (மதிக்கப் பெற்ற) வீரம் உள்ளவர் - என்பது முன்னோர் உரை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Setting hundreds upon hundreds of war arrows to a single draw, swiftly
  2. Irāvaṇaṉ's son, of matchless fierce rage, bent his bow;
  3. with many wounds opening on his huge body, faltering,
  4. the envoy of the peerless hero stayed still for a little while.

What the poem says

With his new bow Intiracittu shoots hundreds of arrows in a single volley. For the first time Aṉumaṉ, covered in wounds, is shaken and pauses for a moment.

Irāmaṉ is called ēṟu cēvakaṉ, the hero who stands out even among the ranks of his enemies, a title also given to Viṣṇu in the hymns of Nammāḻvār.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1nūṟunūṟu pōr vāḷi, ōr toṭai koṭu, noytiṉ,
māṟu il veñ ciṉattu irāvaṇaṉ makaṉ, cilai vaḷaittāṉ;
ūṟu, taṉ neṭu mēṉiyil pala paṭa, olki,
ēṟu cēvakaṉ tūtaṉum, ciṟitu pōtu iruntāṉ.