கம்பராமாயணம் 5789 · சுந்தர 12.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஆர்த்த வானவர் - முன்பு மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்த தேவர்கள்; ஆகுலம் கொளீஇ அறிவு அழிந்தார் - (அனுமான் தளர்ச்சி உற்றது கண்டு) துன்பம் கொண்டு அறிவு கலங்கினார்கள்; பார்த்த மாருதி தாரு ஒன்று அம்கையில் பற்றி - அதுகண்ட அனுமன், (உடனே தளர்ச்சி நீங்கி) ஒரு மரத்தைத் தனது அழகிய கையிலே எடுத்துக் கொண்டு; தூர்த்த வாளிகள் முறை முறை துணிபட - (இந்திரசித்து) எய்து நிரப்புகின்ற அம்புகள் எல்லாம் வரிசை வரிசையாகத் துண்டு பட்டொழியும்படி; சுற்றி - அந்த மரத்தைச் சுற்றி வீசி; பொன்மணி நெடுமுடி போர்த்த தலையிடை - பொன்னாலும் மணியாலும் செய்து நீண்டதாய் விளங்கிய கிரீடம் கவித்துள்ள இந்திரசித்தின் தலையிடத்து; புடைத்தான் - (அம்மரத்தாலே) ஓங்கி அடித்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods who had been cheering were seized with dismay and lost their wits;
- Māruti, seeing this, gripped a tree in his fine hand,
- and whirling it round so that the arrows heaped on him were cut to pieces, wave after wave,
- struck him on the head crowned with a tall crown of gold and gems.
What the poem says
The gods, who had been cheering, are thrown into despair when they see Aṉumaṉ falter. He recovers at once, grabs a tree and whirls it, smashing the oncoming arrows volley after volley.
Then he brings the tree down on Intiracittu's head, with its tall crown of gold and jewels.