கம்பராமாயணம் 5792 · சுந்தர 12.51
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உய்த்த வெம்சரம் - அவ்வாறு இந்திரசித்து செலுத்திய கொடிய அம்புகள்; உரத்தினும் கரத்தினும் ஒளிப்ப - தனது மார்பிலும் கைகளிலும் அழுந்த; மாருதி - அனுமன்; கைத்த சிந்தையன் நனிதவ கனன்றான் - வெறுத்த மனத்தினனாய், மிகவும் கோபம் மேற் கொண்டவனாய்; வித்தகன் சிலை விடுகணை விசையினும் கடுகி - ஞானவடிவனான இராமபிரான் வில்லில் தூண்டும் அம்பின் வேகத்தினும் அதிக வேகமாகச் சென்று; அத்தடம் தேரொடும் எடுத்து - அந்த மிகப் பெரிய தேருடனே (இந்திரசித்தைத்) தூக்கி; எறிந்து ஆர்த்தான் - மேலே வீசி எறிந்து ஆரவாரஞ் செய்தான்.
அனுமன், இந்திரசித்தைத் தேரோடு எடுத்து எறியச் செல்லும் வேகத்துக்கு, இராமபிரானது அம்பின் வேகம் உவமை கூறப்பட்டது. வித்தகன் - மேலோன் (இராமபிரான்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the cruel arrows he sent sank out of sight in his chest and arms,
- Māruti, bitter at heart, blazed with towering anger,
- and rushing faster than an arrow loosed from the bow of the Wise One,
- lifted him with that great, wide chariot, hurled him away, and roared.
What the poem says
The arrows bury themselves in Aṉumaṉ's chest and arms. Enraged, he darts forward faster than an arrow from Irāmaṉ's bow, picks up Intiracittu chariot and all, flings him into the air and roars.
The speed of Irāmaṉ's arrows is the poet's measure of the fastest thing there is.