கம்பராமாயணம் 5793 · சுந்தர 12.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
எண்ணின் மீ சென்ற எறுழ்வலி திறலுடை இகலோன் - எண்ணத்தைக் கடந்து சென்ற (வரம்பு கடந்த) மிக்க வலிமையுடைய பகைவனான இந்திரசித்து; தேரொடும் விண்ணின் மீ சென்று - (அனுமன் எடுத்தெறிந்த விசையினால்) தேரோடும் வானத்தின்மேல் எல்லையில் போய்; புண்ணின் மீ சென்று பொழி புனல் பசும் புலால் பொடிப்ப - புண்களின் மேலே பெருகி வழிகின்ற இரத்தம் புதிய புலால் நாற்றத்தோடு வெளிப்பட; கண்ணின் மீ சென்ற இமை இடை கலப்பதன் முன்னம் - கண்களின் மேல் உள்ள இமை கீழிமையிலே வந்துகூடுவதன் முன்னம்; பார்மிசை வீழ்ந்தான் - தரையில் வந்து வீழ்ந்திட்டான்.
இந்திரசித்து, அனுமனால் வீசி எறியப் பட்டு, தேரோடு, கீழே வந்து விழும் வேகத்துக்கு, கண் இமை பொருந்தும் வேகம் உவமையாக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Before the upper eyelid could meet the lower,
- the foe whose mighty strength went beyond all reckoning,
- with blood streaming over his wounds and giving off the reek of fresh flesh,
- flew up past the sky and fell back to the earth, chariot and all.
What the poem says
Hurled by Aṉumaṉ, Intiracittu and his chariot shoot up to the top of the sky and crash back down to earth, all in less time than it takes to blink.
Blood streams from his wounds as he falls. The blink of an eye is the poet's measure of how fast this happens.