கம்பராமாயணம் 5794 · சுந்தர 12.53

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1விழுந்து, பார் அடையா முன்னம், மின் அன மெய்யான்
எழுந்து, மால் விசும்பு எய்தினன்; இடை, அவன் படையில்,
செழும் தண் மா மணித் தேர் குலம் யாவையும் சிதைய,
உழுந்து பேர்வதன் முன், நெடு மாருதி உதைத்தான்.

பொருள் · Meaning in Tamil

மின் எனும் எயிற்றான் - மின்னலைப் போல ஒளிவீசும் பற்களை உடைய இந்திரசித்து; விழுந்து பார் அடையா முனம் - விழுந்து தரையை அடைவதன் முன்னமே; எழுந்து மா விசும்பு எய்தினன் - எழுந்து, பெரிய ஆகாயத்தை அடைந்தான்; இடை - அதற்கு இடையே; நெடு மாருதி - நீண்ட உருவுடைய அனுமான்; உழுந்து பேர்வதன் முன் - ஒரு உளுந்து உருளும் அளவினுள்ளே (விரைவாக); அவன் படையில் செழுந்திண் மாமணி தேர்க்குலம் யாவையும் - இந்திரசித்துவின் சேனையில் உள்ள பெரிய வலிய இரத்தினங்கள் பதித்த தேர்க்கூட்டம் எல்லாம்; சிதைய உதைத்தான் - அழியும்படி உதைத்தான்.

இந்திரசித்து தேரோடு நிலத்தில் விழுந்தவுடன், சிறிதும் தாமதிக்காது எழுந்து மேற் சென்றான் என்பதும், அவ்வாறு, அவன் மேற்செல்லும் கால அளவிற்குள் (உளுந்து உருளும் நேரத்துக்குள்) அவனுடைய மற்றைய தேர்க்குலத்தை அனுமன் உதைத்துச் சிதைத்தான் என்பதும் அதிவிரைவில் நிகழ்ந்த செயல்கள் ஆகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Before he had fallen and touched the ground, he of the lightning-bright teeth
  2. sprang up and reached the vast sky; meanwhile, in his army,
  3. all the ranks of rich, strong, gem-studded chariots, so that they were shattered,
  4. tall Māruti kicked, before a gram seed could roll.

What the poem says

Both warriors move with dazzling speed. Intiracittu barely touches the ground before he springs up into the sky, and in that instant, in less time than a black gram seed takes to roll, Aṉumaṉ kicks the rest of the prince's jewelled chariots to pieces.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1viḻuntu, pār aṭaiyā muṉam, miṉ eṉum eyiṟṟāṉ
eḻuntu, mā vicumpu eytiṉaṉ; iṭai, avaṉ paṭaiyil,
ceḻun tiṇ mā maṇit tērk kulam yāvaiyum citaiya,
uḻuntu pērvataṉ muṉ, neṭu māruti utaittāṉ.