கம்பராமாயணம் 5795 · சுந்தர 12.54
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
ஏறு தேர் இலன் - (தான் மீண்டும்) ஏறிப் போர்புரிய வேறு தேர் இல்லாதவனாய்; எதிர் நிற்கும் உரன் இலன் - (அனுமன்) எதிரே நின்று போர் செய்யும் வலிமை அற்றவனாய்; எரியின் சீறு வெம் சினம் திருகினன் - தீப் போலச் சீறுகின்ற கொடிய சினத்தால் மாறுபட்டவனாகி; அந்தரம் திரிவான் - வானில் சஞ்சரிக்கும் இந்திரசித்து; வேறு செய்வது ஓர் வினை பிறிது இன்மையின் - செய்வதற்குரியதோர் செயல் வேறு இல்லாமையால்; விரிஞ்சன் மாறு இலாப் பெரும் படைக்கலம் - பிரம்மதேவனுடைய நிகர் இல்லாத பெரிய ஆயுதமாகிய பிரம்மாத்திரத்தை; தொடுப்பதே மதித்தான் - தூண்டுவதாகிய கடுஞ் செயலையே செய்யத் துணிவு கொண்டான்.
இந்திரசித்து, பிரம்மாத்திரத்தைத் தொடுக்கத் துணிவதன் காரணம் கூறப்பட்டது. விரிஞ்சன் - பிரம்மன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With no chariot left to mount, with no strength to stand against him, twisted
- with fierce rage that hissed like fire, roaming the sky,
- since there was no other course left for him to take, to loose Viriñcaṉ's
- great, matchless weapon was what he resolved.
What the poem says
Out of chariots and unable to match Aṉumaṉ face to face, Intiracittu circles in the sky, burning with anger. With nothing else left to try, he decides on the ultimate weapon: the missile of Brahmā, called Viriñcaṉ here: the brahmāstra.