கம்பராமாயணம் 5796 · சுந்தர 12.55

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1பூவும், பூநிற அயினியும், தீபமும், புகையும்,
தாவு இல் பாவனையால் கொடுத்து, அருச்சனை சமைத்தான்,
தேவும், யாவையும், உலகமும், திருத்திய தெய்வக்
கோவில்; நான்முகன் படைக்கலம் தடக்கையில் கொண்டான்.

பொருள் · Meaning in Tamil

தா இல் பாவனையால் - தவறுதல் இல்லாத தியானவகையினால்; பூவும், பூநிற அயினியும் தீபமும், புகையும் கொடுத்து - மலர்களையும் பூநிறம் உள்ள வெண்சோறாகிய நைவேத்தியத்தையும் தீபத்தையும் தூபத்தையும் சமர்ப்பித்து; அருச்சனை சமைத்தான் - பிரம்மாத்திரத்துக்கு அருச்சனை செய்து; தேவு யாவையும் உலகமும் திருத்திய - தெய்வங்கள் எல்லாவற்றையும், உலகங்களையும் ஒழுங்காகப் படைத்த; தெய்வக் கோவில் நான்முகன் படைக்கலம் - தெய்வத் தன்மையுள்ள (திருமாலின் திருநாபிக்கமலமாகிய) சிறந்த இடத்தில் தோன்றி வசிக்கின்ற பிரம்மதேவனுடைய ஆயுதமான பிரம்மாத்திரத்தை; தடம் கையில் கொண்டான் - தனது பெரிய கையில் எடுத்துக் கொண்டான்.

இந்திரசித்து, பிரம்மாத்திரத்துக்குப் பூசை செய்தது பாவனையால் (தியானத்தால்) என்பது கூறப்பட்டது. போர்க்களம் ஆகையால், பூசைக்கு வெளிப் பொருள்கள் இல்லை என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Flowers, offerings of rice the colour of blossoms, lamps and incense
  2. he offered with flawless inner devotion, and so completed the worship;
  3. then the weapon of him who set in order all the gods and the worlds, dwelling in a sacred shrine,
  4. the Four-Faced One's weapon, he took up in his great hand.

What the poem says

Before using the weapon, Intiracittu worships it with flowers, white rice, lamps and incense. On a battlefield none of these things are at hand, so, the commentary explains, he offers them in his mind, through perfect meditation.

Then he takes up the weapon of Brahmā, the four-faced creator who ordered the gods and the worlds and who sits in the lotus that grows from Viṣṇu's navel.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pūvum, pūniṟa ayiṉiyum, tīpamum, pukaiyum,
tā il pāvaṉaiyāl koṭuttu, aruccaṉai camaittāṉ,
tēvu, yāvaiyum, ulakamum, tiruttiya teyvak
kōvil; nāṉmukaṉ paṭaikkalam taṭakkaiyil koṇṭāṉ.