கம்பராமாயணம் 5797 · சுந்தர 12.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொண்டு - அவ்வாறு பிரம்மாத்திரத்தைக் கையில் கொண்டு; கொற்றவெம் சிலை நெடு நாணொடு கூட்டி - அதை, தனது வலிய கொடிய வில்லின் நீண்ட நாணோடு சேர்த்து; சண்ட வேகத்த மாருதி தோளொடு சாத்தி - கொடிய வேகமுடைய அனுமனது தோள்களை இலக்காகக் குறிவைத்து; மண் துளங்கிட - பூமி நடுங்க; மாதிரம் துளங்கிட - திசைகள் நடுங்க; மதிதோய் விண் துளங்கிட - சந்திரன் தங்கிய வானம் நடுங்கிட; மேருவும் துளங்கிட - மேரு மலையும் நடுக்கம் கொள்ள; விட்டான் - அதனைத் தூண்டி விட்டான்.
இந்திரசித்து தெய்வத்தன்மையுள்ள பிரம்மாத்திரத்தை, அனுமனுடைய தோள்களைக் கட்டுமாறு மந்திரம் கூறி விட்டனன் என்க. மேருவும்; உம்மை உயர்வு சிறப்பினது. பிரம்மாத்திரத்தின் வலிமை இச்செய்யுளில் தெரிவிக்கப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Taking it, he set it to the long string of his cruel, victorious bow,
- aimed it at the shoulders of Māruti of furious speed,
- and so that the earth shook, the quarters shook, the moon-touched
- sky shook and even Mēru shook, he let it fly.
What the poem says
Intiracittu fits the brahmāstra to his bow, aims it at Aṉumaṉ's shoulders and, chanting the spell that will bind them, releases it.
Its launch shakes the earth, the directions, the sky and even Mount Mēru, the most unshakable thing of all.