கம்பராமாயணம் 5798 · சுந்தர 12.57

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1தணிப்பு அரும் பெரும் படைக்கலம், தழல் உமிழ் தறுகண்
பணிக் குலங்களுக்கு அரசனது உருவினைப் பற்றித்
துணிக்க உற்று உயர் கலுழனும் துணுக்கு உற சுற்றிப்
பிணித்தது; அப்பெரு மாருதி தோள்களைப் பிறங்க.

பொருள் · Meaning in Tamil

தணிப்பு அரும் - எவராலும் அடக்குதற்கு அரியதான; பெரும் படைக்கலம் - பெரிய அந்த அத்திரமானது; தழல் உமிழ் தறுகண் - கனல் வீசும் கொடுமை வாய்ந்த; பணி குலங்களுக்கு அரசினது உருவினை பற்றி - பாம்புக் கூட்டங்களுக்கு அரசனுடைய வடிவத்தை ஏற்றுக் கொண்டு; துணிக்க உற்று உயர் கலுழனும் - அதனைத் துண்டிக்க வந்த உயர எழும் கருடனும்; துணுக்குற - அஞ்சும்படி; அப் பெரு மாருதி தோள்களை பிறங்க சுற்றி பிணித்தது - அந்தப் பெரிய அனுமன் தோள்களை நன்றாகச் சுற்றிக் கொண்டு கட்டிவிட்டது. பாம்புகளை எளிதில் அழிக்கும் தன்மையதான கருடனும் அஞ்சும்படி, பெரும் பாம்பின் வடிவத்துடன் சென்ற பிரமாத்திரம் அனுமன் தோள்களைப் பிணித்தது என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. That great, irresistible weapon, taking on the form of the king
  2. of the fierce-eyed, fire-spitting serpent tribes,
  3. so that even lofty Kaluḻaṉ, come to cut it apart, recoiled in fear, coiled around
  4. and bound fast the shoulders of that great Māruti.

What the poem says

The brahmāstra turns into a gigantic serpent, the king of all snakes, spitting fire. It coils round Aṉumaṉ's shoulders and binds them tight.

So terrible is it that even Garuḍa, Kaluḻaṉ in Tamil, the divine eagle who kills snakes with ease, would shrink from attacking it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1taṇippu arum perum paṭaikkalam, taḻal umiḻ taṟukaṇ
paṇik kulaṅkaḷukku araciṉatu uruviṉaip paṟṟi
tuṇikka uṟṟu uyar kaluḻaṉum tuṇukkuṟa cuṟṟip
piṇittatu; apperu māruti tōḷkaḷaip piṟaṅka.