கம்பராமாயணம் 5799 · சுந்தர 12.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
திசை முகன் படை - பிரம்மதேவன் ஆயுதம்; திண் என் யாக்கையை சென்று திருக - வலிமை வாய்ந்த அனுமனது உடலைப் போய்ச் சுற்றிக் கட்ட, (வருத்த); அண்ணல் மாருதி - பெருமையை உடைய அனுமன்; கடை நாள் - யுக முடிவுக் காலத்தில்; தண் என் மாமதி கோளொடும் சாய்ந்தென - குளிர்ச்சியான பெரிய பூர்ண நிலவு (ராகு என்ற) பாம்புடனே வானத்தினின்றும் கீழே விழுந்தால் போல; அன்று தன் பின் சென்ற அறத்தின் கண்ணின் நீரொடும் - (அவன் இலங்கையில் புகுந்த) அன்று, தன்பின்னே வந்த தரும தேவதையின் கண்ணீரொடும்; கனக தோரணத்தொடும் சாய்ந்தான் - பொன் மயமான தோரண வாயிலோடும் படிந்து சாய்ந்து விழுந்தான்.
அசோக வனத்து வெளிவாயிலில் நின்று அரக்கர்களுடன் போர் செய்த அனுமன் பிரம்மாத்திரத்தால் கட்டுண்டு அவ்விடத்திலேயே சாய்ந்தான். இதனைக் கனக தோரணத்தொடும் சாய்ந்தான் என்பதால் உணரலாம். மதி, அனுமனுக்கும், தோரணம், கோளுக்கும் ஒப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the weapon of the Four-Faced One went and wound tight round his sturdy body,
- noble Māruti, together with the tears of Dharma, who had followed behind him that day,
- and with the golden archway, as when at the end of time
- the cool great moon falls together with the planet that seizes it, fell.
What the poem says
Bound by the weapon, Aṉumaṉ collapses together with the golden archway of the grove where he had been fighting.
Two images frame the fall. It is like the full moon dropping out of the sky at the end of time along with Rāhu, the serpent planet that swallows it: Aṉumaṉ is the moon, the archway is Rāhu. And with him falls the grief of Dharma, the spirit of righteousness, who had followed him into Ilaṅkai and now weeps.