கம்பராமாயணம் 5800 · சுந்தர 12.59

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1சாய்ந்த மாருதி, சதுமுகன்படை எனும் தன்மை
ஆய்ந்து, மற்று இதன் ஆணையை அவமதித்து அகல்கை
ஏய்ந்தது அன்று என எண்ணினன், கண்முகிழ்த்து இருந்தான்;
'ஓய்ந்தது ஆம் இவன் வலி'என, அரக்கன் வந்து உற்றான்.

பொருள் · Meaning in Tamil

சதுமுகன் படை எனும் தன்மை ஆய்ந்து - (தன் மேற் செலுத்தியது) பிரம்மாத்திரம் என்னும் உண்மையை உணர்ந்தறிந்து; இதன் ஆணையை அவமதித்து அகறல் ஏய்ந்தது அன்று என எண்ணினன் - இதன் கட்டளையை இகழ்ந்து இதனைவிட்டு நீங்குதல் தக்கதன்று எனக் கருதியவனாய்; கண் முகிழ்த்து இருந்தான் - கண்ணை மூடிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டவன் போல் இருந்தான்; அரக்கன் “இவன் வலி ஓய்ந்தது ஆம்” என - அரக்கனாகிய இந்திரசித்து, இவனுடைய வலிமை ஒழிந்துவிட்டது என்று எண்ணி; வந்துற்றான் - அனுமன் அருகில் வந்தடைந்தான்.

வர பலத்தால் பிரம்மாத்திரத்தையும் கடக்கும் ஆற்றல் உள்ளவனாயினும், அனுமன் பிரம்ம தேவனைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற பெருந்தகையினால், அதற்குக் கட்டுப்பட்டிருந்தான் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Māruti, fallen, perceiving that this was the weapon of the Four-Faced One,
  2. and thinking that to defy its command and break away
  3. would not be fitting, lay with his eyes closed;
  4. and the demon came up, thinking, "His strength is spent."

What the poem says

Aṉumaṉ recognises the weapon as Brahmā's. By a boon he could break free even from this, but out of reverence for Brahmā he chooses not to defy it, and lies still with closed eyes as though overpowered.

Intiracittu, believing the monkey's strength is gone, comes closer.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cāynta māruti, catumukaṉpaṭai eṉum taṉmai
āyntu, maṟṟu itaṉ āṇaiyai avamatittu akaṟal
ēyntatu aṉṟu eṉa eṇṇiṉaṉ, kaṇmukiḻttu iruntāṉ;
'ōyntatu ām ivaṉ vali'eṉa, arakkaṉ vantuṟṟāṉ.