கம்பராமாயணம் 5801 · சுந்தர 12.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உற்ற காலையின் - (இவ்வாறு இந்திரசித்து அனுமன் அருகில் வந்து) சேர்ந்தபோது; உயிர் கொடு - முன் அனுமனுடன் போர் செய்ய அஞ்சித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு; திசைதொறும் ஒதுங்கி - நான்கு திசைகளிலும் ஓடி மறைந்து; அற்றம் நோக்கினர் - (அனுமனுக்குச்) சோர்வு நேரும் சமயத்தை எதிர் பார்த்து; நிற்கின்ற வாள் எயிற்று அரக்கர் பலர் - நின்ற, ஒளி தங்கிய பற்களையுடைய அரக்கர்களில் பலர்; சுற்றும் வந்து - அனுமனை நாற்புறங்களிலும் சூழ்ந்து வந்து; உடல் சுற்றிய தொளை எயிற்று அரவை - அனுமன் உடம்பைச் சுற்றிக் கொண்டிருந்த, துவாரமுள்ள விஷப்பற்களை உடைய அரவ வடிவான அந்தப் பிரம்மாத்திரத்தை; பற்றி ஈர்த்தனர் தெழித்தனர் - பிடித்து இழுத்து ஆர்த்தனர் பெருமுழக்கமிட்டு அனுமனை அதட்டினார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he came near, the bright-fanged demons who had fled to save their lives,
- slinking off in every direction, and stood watching for a moment of weakness,
- came round from all sides and, seizing the hollow-fanged serpent coiled about his body,
- many of them dragged at it, roared and bellowed threats.
What the poem says
The demons who had run off in every direction to save their lives, waiting for Aṉumaṉ to show any weakness, now crowd round. They grab the serpent-shaped weapon binding him and haul on it, roaring and jeering, brave now that he cannot fight back.