கம்பராமாயணம் 5803 · சுந்தர 12.62

Section சுந்தர காண்டம் / 12. பாசப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கறுத்த மாசுணம், கனக மா மேனியைப் பற்ற,
அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன்,
மறத்து மாருதம் பொருத நாள், வாசுகி என்பான்
புறத்துச் சுற்றிய மேரு மா மலையையும் போன்றான்.

பொருள் · Meaning in Tamil

கறுத்த மாசுணம் - கோபம் கொண்ட அந்தப் பிரம்மாத்திரமாகிய பாம்பு; கனகமா மேனியை கட்ட - பொன்னிறமான அனுமன் திருமேனியை வலிதில் இறுக்கிப் பிணிக்க; அறத்துக்கு ஆங்கு ஒரு தனி துணை என நின்ற அனுமன் - தரும தேவதைக்கு, அந்த இலங்கையில் தான் ஒருவனே துணைவனாக இருந்த அனுமன்; மறத்து மாருதம் பொருத நாள் வாள் அர அரசு - வலிமையோடு காற்று வீசியடித்த காலத்து, ஒளி தங்கிய அரவுக்கரசனான ஆதிசேடன்; புறத்து சுற்றிய - தன் வெளிப் புறமெல்லாம் நன்றாகச் சுற்றிக் கொண்டதாய் இருந்த; மேருமால் வரையையும் போன்றான் - மேரு மலையையும் ஒத்து விளங்கினான்.

பெரு வடிவமுள்ள அனுமனைச் சூழ்ந்து இறுக்கிய பாம்புக்கு, மேருமலையை வளைத்து இறுக்கிய ஆதி சேடன் உவமையாக்கப்பட்டது. அனுமனுக்கு மேரு மலை உவமை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As the angry serpent bound his great golden body,
  2. Aṉumaṉ, who stood there as the one and only ally of Dharma,
  3. was like great Mount Mēru when, on the day the Wind fought in fury, the shining king of serpents
  4. coiled round its outside.

What the poem says

A second image for the bound Aṉumaṉ, the lone champion of righteousness in Ilaṅkai. He is like golden Mount Mēru in the old story of the contest between the Wind god and Ātiśēṣaṉ, king of serpents, when the serpent wrapped himself around the mountain so that the wind could not blow it away.

Aṉumaṉ, son of the Wind, is the golden mountain; the weapon coiled about him is the great serpent.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṟutta mācuṇam, kaṉaka mā mēṉiyaik kaṭṭa,
aṟattukku āṅku oru taṉit tuṇai eṉa niṉṟa aṉumaṉ,
maṟattu mārutam poruta nāḷ, vāḷ arā aracu
puṟattuc cuṟṟiya mēru māl varaiyaiyum pōṉṟāṉ.