கம்பராமாயணம் 5804 · சுந்தர 12.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மைந்தரும் மகளிரும் - (அரக்கர்களில்) ஆடவர்களும் பெண்பாலாரும்; வந்து இரைத்தனர் - வந்து ஒலி செய்தவராய்; மழை போல் - மேகத்தின் பேரிடி போல; அந்தரத்தினும், விசும்பினும், திசை தொறும் ஆர்ப்பார் - வெற்றிடங்களிலும், ஆகாயத்திலும், நான்கு திசைகளிலும், பெருமுழக்கமிடுவாராயினார்; முந்தி உற்ற பேர் உவகைக்கு - யாவற்றினும் முன்னதாக அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு; ஓர் கரை இலை - ஒரு எல்லை இல்லை; மொழியின் - (அம் மகிழ்ச்சிக்கு ஒரு உவமை) கூறுமிடத்து; அ இலங்கை இந்திரன் பிணிப்புண்ட நாள் ஒத்தது - அந்த இலங்கை நகர், (முன்பு) தேவேந்திரன் மேகநாதனால் கட்டப்பட்ட நாளில் களிப்படைந்ததை ஒத்திருந்தது.
மேகநாதன், தேவேந்திரனைப் பிடித்துக் கட்டிக் கொண்டு வந்த போது, இலங்கை நகரத்தினர் எப்படி மகிழ்ந்தனரோ, அப்படி அனுமனைக் கட்டிக் கொண்டு வந்த இப்போதும் மகிழ்ந்தனர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Men and women came crowding, clamouring like thunderclouds,
- shouting in the open spaces, in the sky and in every quarter;
- their great joy, rising above all else, had no shore; to put it in words,
- that Ilaṅkai was as on the day Intiraṉ was taken captive.
What the poem says
The demon men and women pour out, filling the air with shouts like thunder. Their delight is boundless.
The only comparison the poet can find is the day long ago when Mēkanātaṉ brought Intiraṉ, king of the gods, back to Ilaṅkai in chains. With this verse the chapter of the binding ends.