கம்பராமாயணம் 5806 · சுந்தர 13.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மை தடம் கண்ணியர் - மையிட்ட பெரிய கண்களை உடையவர்களான மகளிரும்; மைந்தர் - ஆடவரும்; யாவரும் - ஆகிய எல்லோரும்; பைத்தலை அரவு என கனன்று - படத்தோடு கூடிய தலையை உடைய பாம்பு போலக் கோபம் கொண்டு; பைதலை - இந்தக் குரங்குப் பயலை; இத்தனை பொழுது கொண்டு இருப்பதோ எனா - இவ்வளவு நேரம் உயிருடன் வைத்துக் கொண்டு நாம் வாளா இருப்பதோ என்று கூறி; மொய்த்தனர் - அனுமனைச் சூழ்ந்து மொய்த்துக் கொண்டனர்; சிலர் கொலை செய முயல்கின்றார் - சில அரக்கர்கள், அனுமனைக் கொலை செய்ய முயற்சி செய்வாராயினர்.
கண்ணியர் மைந்தர் யாவரும் மொய்த்தனர்; சிலர் கொலை செய்ய முயன்றனர் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Women with large, kohl-lined eyes and the men, all of them,
- hissing with rage like hooded snakes, said, "This brat:
- are we to keep it alive all this while?"
- and swarmed round; and some set about trying to kill him.
What the poem says
Demon women and men alike, hissing with anger like cobras, swarm around Aṉumaṉ, asking why "this young pup" has been allowed to live so long. Some of them actually start trying to kill him.