கம்பராமாயணம் 5807 · சுந்தர 13.3
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிலர் - வேறு சிலர்; வச்சிர உடல் - இந்தக் குரங்கின் வயிரம் போன்ற உடல்; நச்சு அடை படைகளால் நலியும் ஈட்டதோ? - விஷம் தடவிய ஆயுதங்களைக் கொண்டு வருத்தி அழிக்கப்படத் தக்கதோ?; மறி கடலின் வாய் மடுத்து உச்சியின் உருத்து அழுத்துமின் - (அன்று என்றபடி) மடங்கிவிழும் கடலினிடம் தள்ளி (வெளிக்கிளம்பாதபடி) இதனைத் தலை உச்சியில் நன்றாக அழுத்துங்கள்; அது அன்று எனின் - அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால்; கிச்சிடை இடும் - நெருப்பிடை இட்டுக் கொல்லுங்கள்; என கிளக்கின்றார் - என்று சொல்வாராயினர்.
கிச்சு - நெருப்பு; கன்னடச்சொல்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Can it be hurt by poisoned weapons? No; this body hard as diamond,
- thrust it into the mouth of the rolling sea,
- and hold it down by the crown of its head with all your might; and if that won't do,
- throw it into the fire!" said some.
What the poem says
Others in the crowd realise that weapons, even poisoned ones, will not harm a body as hard as diamond. They propose drowning him by holding his head under the sea, or, failing that, burning him.
The word used for fire, kiccu, is noted by the commentary as a Kannada word.