கம்பராமாயணம் 5808 · சுந்தர 13.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பலர் - வேறு பலர்; எந்தையை எம்பியை - “எமது தந்தையையும், எமது தம்பியையும்; எம்முன்னோர்களை - எமது தமையன்மார்களையும்; தந்தனை போகு எனா - மீளக் கொணர்ந்து கொடுத்து அப்புறம் செல்” என்று சொல்லி (அனுமனை); தடுக்கின்றார் - மறித்துக் கொள்பவரானார்கள்; பலர் - வேறு பலர்; இவன் அந்தரத்து அமரர்தம் ஆணையால் வந்தது என்று - இவன், வானில் உள்ள தேவர்களின் கட்டளையினால் இங்கு வந்ததாகும் என்று மாறாக எண்ணி; உயிர் கொள மறுகினார் - அந்த அனுமன் உயிரைப் பற்றிப் பறிக்க முடியாது வருந்தினார்கள்.
தேவர்கள் அரக்கர்களுக்குப் பகைவர்களாதலால், அவர்களது ஆணையின் படி அனுமன் இலங்கைக்கு வந்திருக்கலாம் என்பது பல அரக்கர்களது எண்ணம். மறுகுதல் - மனம் குழம்புதல்; இவனை எங்ஙனம் கொல்வது என்று மனம் கலங்கினர் பலர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Give back my father, my younger brother, my elder brothers,
- and then go!" said many, blocking his way;
- "He has come here by order of the gods in the sky," said many,
- and were at a loss how to take his life.
What the poem says
Some demons bar Aṉumaṉ's way, crying out that he must give back the fathers and brothers he has killed before he may go.
Others suspect that the gods, the demons' old enemies, have sent him, and they are troubled, not knowing how such a creature could be killed.