கம்பராமாயணம் 5809 · சுந்தர 13.5

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஓங்கல் அம் பெருவலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம்; இனி
ஏங்கலம் இவன் சிரம் இருத்தலால் திரு
வாங்கலம்'என்று அழும் மாதரார் பலர்.

பொருள் · Meaning in Tamil

ஓங்கல் அம் பெருவலி உயிரின் அன்பரை - “மலை போன்ற மிக்க வலிமையும் அழகும் உடைய எமது உயிர் அனைய கணவன்மார்களை; நீங்கலம் - இதுவரை நாங்கள் பிரிந்திலோம்; இன்றொடு நீங்கினாம் - (இவனால்) இன்றொடு நீங்கினவர்களானோம்; இனி ஏங்கலம் - இனி யாம் ஏக்கமுற்று வருந்தமாட்டோம்; இவன் சிரத்து இருந்து அலால் திருவாங்கலம் - இவன் தலையையே பீடமாகக் கொண்டு உட்கார்ந்து இருத்தலால், எங்கள் திருமாங்கல்யத்தை வாங்கி அகற்ற மாட்டோம்”; என்று அழும் மாதரார் பலர் - என்று சொல்லி அழும் அரக்க மகளிர் பலராவர்.

“தாலி வாங்கும் துக்கச் சடங்கை, குரங்கினைக் கொன்று, அதன் தலையின் மேல் தான் நடத்துவோம்” என்று அரக்க மகளிர் வீராவேசத்துடன் கூறினர் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Our beloved, dear as life, of mountain-high strength, we had never
  2. been parted from; today we have been parted; now
  3. we will not pine; unless we sit upon this one's head,
  4. we will not take off our marriage threads," wept many women.

What the poem says

Demon widows weep that the husbands they had never been parted from were taken from them today.

Instead of simply mourning, they vow that they will perform the widow's rite of removing the marriage thread, the tāli, only when they can sit on the head of the dead monkey. Grief turns into a fierce demand for revenge.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ōṅkal am peruvali uyiriṉ aṉparai
nīṅkalam iṉṟoṭu nīṅkiṉām; iṉi
ēṅkalam ivaṉ cirattu iruntu alāl tiru
vāṅkalam'eṉṟu aḻum mātarār palar.