கம்பராமாயணம் 5810 · சுந்தர 13.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கொண்டனர் - அனுமனைப் பற்றி இழுத்துக் கொண்டு செல்பவர்களுக்கு; எதிர் செலும் கொற்ற மாநகர் - எதிரே வேடிக்கை பார்க்க வருகின்ற வெற்றியை உடைய இலங்கை நகரில் உள்ள அரக்கர்கள்; நெடிது ஆர்க்கும் ஆர்ப்பு அது - பெரிதாய் முழக்கும் ஆரவார ஒலி; கண்டம் உற்று உள - (அனுமனால் போரில்) கழுத்து அறுபட்டு அழிவடைந்துள்ள; அரும் கணவர்க்கு ஏங்கிய குண்டல முகத்தியர்க்கு - தமது அரிய கணவர்களுக்காக ஏக்கமுற்று வருந்திய, குண்டலம் விளங்கும் முகத்தை உடைய அரக்கமகளிர்க்கு; உவகை கூர - மகிழ்ச்சி மேலோங்கிவர; அண்டம் உற்றது - உலகம் முழுதும் பரவிற்று.
தம் கணவன்மார்களைக் கொன்ற அனுமனைக் கட்டி இழுத்து வரும் செய்தியைக் கண்ட அரக்கர்களது பேரொலியைக் கேட்டதனால், கணவர்களை இழந்த மகளிர்கள் மகிழ்ந்தனர் என்க.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The victorious great city, coming out to meet those who led him,
- raised a long, loud roar that reached the ends of the cosmos,
- so that, pining for their dear husbands whose throats had been cut,
- the women with earrings framing their faces felt their joy swell.
What the poem says
The people of Ilaṅkai pour out to watch Aṉumaṉ being dragged along, and their shouting fills the universe.
Hearing it, the earringed widows whose husbands Aṉumaṉ had killed feel a surge of joy at the news that the killer has been caught.