கம்பராமாயணம் 5811 · சுந்தர 13.7

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வடி உடை கனல்படை வயவர் - கூர்மை பொருந்திய நெருப்பைப் போன்ற கொடிய ஆயுதங்களைக் கொண்ட போர் வீரர்களையும்; மால்கரி கொடி உடை தேர் பரி கொண்டு வீசலின் - பெரிய யானை, கொடிகட்டிய தேர் குதிரை ஆகியவற்றை (தான்) கையில் எடுத்து வீசி எறிந்ததனால்; இடிபட சிதைந்த மால் வரையின் - இடி விழுதலால் சிதைவுபட்ட பெரிய மலைகள் போல; பொடி பட கிடந்தன இல் எலாம் - பொடிப் பொடியாக நொறுங்கிக் கிடந்தனவான இலங்கை நகரத்து வீடுகளை எல்லாம்; கண்டு - (மகிழ்ச்சியோடு) பார்த்துக் கொண்டே; போயினான் - (அனுமன்) அந்நகரத்து வீதிகளின் வழியாய்ச் சென்றான்.

அனுமன் இலங்கை நகரத்து மாளிகைகளின் இடிபாடுகளைப் பார்த்துக் கொண்டு, மகிழ்ச்சியை வெளிக்காட்டாது வீதி வழியே சென்றான் என்பது கருத்து.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Because he had seized and hurled warriors with keen, fiery weapons, great elephants,
  2. bannered chariots and horses,
  3. all the houses, like great mountains shattered by thunderbolts,
  4. lay ground to dust; he went on, looking at them.

What the poem says

As he is led through the streets, Aṉumaṉ passes the houses he had wrecked in the fighting by hurling warriors, elephants, chariots and horses at them. They lie in ruins like mountains struck by lightning.

He looks on with quiet satisfaction, careful not to let his pleasure show.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṭi uṭaik kaṉal paṭai vayavar mālkari
koṭiyuṭait tēr pari koṇṭu vīcaliṉ
iṭipaṭac citainta māl varaiyiṉ il elām
poṭipaṭak kiṭantaṉa kaṇṭu pōyiṉāṉ.