கம்பராமாயணம் 5812 · சுந்தர 13.8

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1முயிறு அலைத்து எழும் முது மரத்தின் மொய்ம்பு தோள்
கயிறு அலைப்பு உண்டது கண்டு காண்கிலாது
எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் ஏழையர்
வயிறு அலைத்து இரியலின் மயங்கினார் பலர்.

பொருள் · Meaning in Tamil

முயிறு அலைத்து எழு முது மரத்தின் - எறும்பினங்களால் சூழப்பெற்று வளர்ந்த ஒரு பழைய மரத்தைப் போல; மொய்ம்பு தோள் - அனுமனது வலிய தோள்களை; கயிறு அலைப்புண்டது கண்டும் - நாகபாசம் கட்டி வருத்தியிருப்பதைப் பார்த்தும்; காண்கிலாது - (பயத்தினால்) பார்க்காமல்; ஏழையர் வயிறு அலைத்து இரியலின் - பேதையர்களான அரக்கிமார்கள் (குரங்கு இங்கும் வந்துவிட்டதோ என்று அஞ்சி) வயிற்றைப் பிசைந்து கொண்டு ஓடுதலின்; எயிறு அலைத்து எழும் இதழ் அரக்கர் பலர் - கோரைப் பற்கள் அச்சத்தால் நடுங்கி மேற்கிளம்பும் உதட்டை உடைய அரக்கர் பலர்; மயங்கினார் - (இக்குரங்கு என்ன தீமை செய்யத் தொடங்கியதோ என்று) திகைப்புற்றார்கள்.

முயிறு - ஒருவகைச் செவ்வெறும்பு. இது நாகபாசத்துக்கும் முதுமரம், அனுமன் தோளுக்கும் உவமைகள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. His mighty shoulders, like an old tree swarming with red ants,
  2. were held fast by the rope, yet though they saw it they did not see it;
  3. the demons, with lips lifting over chattering fangs, and the silly women,
  4. as these beat their bellies and fled, many were bewildered.

What the poem says

Even though they can see Aṉumaṉ's shoulders bound by the serpent, like an old tree covered with red ants, many of the demons are too frightened to take it in.

Silly demon women, thinking the monkey is loose again, clutch their stomachs and run, and the men, their lips trembling over their fangs, are thrown into confusion about what new mischief he might be up to.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1muyiṟu alaittu eḻu mutu marattiṉ moympu tōḷ
kayiṟu alaippuṇṭatu kaṇṭum kāṇkilātu
eyiṟu alaittu eḻum itaḻ arakkar ēḻaiyar
vayiṟu alaittu iriyaliṉ mayaṅkiṉār palar.