கம்பராமாயணம் 5813 · சுந்தர 13.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
பலர், ஆர்ப்பு உற அஞ்சினர் அடங்கினார் - பல அரக்கர்கள், நகரில் ஆரவாரம் உண்டாக, (அதனைக் கேட்டு) பயந்தவர்களாய் அடங்கியிருந்தனர்; பலர் போர் புறச் செயலினை புகல்கின்றார் - வேறு பல அரக்கர்கள், (அனுமான்) போரில் செய்த வீரச் செயல்களை எடுத்துக் கூறுவாராயினார்; பலர் பார்ப்புற பார்ப்புற - மற்றும் பல அரக்கர்கள், அனுமனைப் பார்க்கும் போதெல்லாம்; பயத்தினால் பதைத்து ஊர்ப் புறத்து இரியலுற்று ஓடுவார் - அச்சத்தால் நடுங்கி, ஊருக்கு வெளியே சிதறி ஓடுபவரானார்கள்.
அனுமனைக் கண்ட அரக்கர் பலரின் செயல்கள் கூறப்பட்டன.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Many, frightened when the roar went up, kept quiet;
- many told of the deeds he had done on the field of battle;
- many, every time they looked and looked again, quaking with fear,
- scattered and ran off to the outskirts of the city.
What the poem says
The crowd reacts in different ways. Some, frightened by the uproar, keep silent; some recount Aṉumaṉ's exploits in battle; and others, every time they catch sight of him, panic and run for the edge of the city.