கம்பராமாயணம் 5814 · சுந்தர 13.10
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காந்து உறு கதழ் எயிற்று - எரிக்கும் தன்மையுள்ளதும் கொடுமையுள்ளதுமான நச்சுப்பற்களை உடைய; அரவின் கட்டு - பாம்பினாலாகிய இந்தப் பிணிப்பு; ஒரு பூந்துணர் சேர்த்து என - ஒரு பூ மாலை கொண்டு கட்டினது போல; வாள் முகம் பொலியும் - ஒளியுள்ள (இக்குரங்கினது) முகம் விளங்குகின்றது; தேர்ந்து - (ஆதலால்) விரைவுபடாது ஆலோசித்து; உறுபொருள் பெற எண்ணி - நல்ல பயனைப் பெறுமாறு சிந்தித்து; செய்யுமின் - (அதற்கு) அப்பாற் செய்ய வேண்டிய காரியத்தைச் செய்யுங்கள்; வேந்து உறல் பழுது - இந் நிலையில் இக்குரங்கு அரசனிடம் போய்ச் சேர்தல் பயனுடையதன்று; என, விளம்புவார் சிலர் - என்று சில அரக்கர்கள் சொல்வார்கள்.
பிரம்மாத்திரப் பிணிப்பு, அனுமனுக்குப் பூமாலை பூண்டது போன்றுதான் இருந்தது; வருத்தமில்லை என்பது கருத்து.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "As if the bond of the serpent with burning, fierce fangs
- were a spray of flowers tied on him, his bright face shines;
- think it through, and act so as to gain some real good;
- bringing him to the king is a mistake," said some.
What the poem says
A few demons notice that Aṉumaṉ's face is calm and radiant, as if the deadly serpent around him were no more than a garland of flowers. He is plainly not suffering.
They urge caution: think carefully before acting, because bringing such a creature before the king may turn out badly.