கம்பராமாயணம் 5819 · சுந்தர 13.15

Section சுந்தர காண்டம் / 13. பிணி வீட்டு படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'கயிலையின் ஒரு தனிக் கணிச்சி வானவன்
மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியான்
எயில் உடைத் திருநகர் சிதைப்ப எய்தினன்
அயில் எயிற்று ஒரு குரங்காய்;' என்பார் சிலர்.

பொருள் · Meaning in Tamil

கயிலையின் ஒரு தனி கணிச்சி வானவன் - கயிலைமலை மீது உள்ள ஒப்பற்ற மழு என்னும் ஆயுதத்தை ஏந்திய சிவபிரானாகிய தேவன்; மயில் இயல் சீதைதன் கற்பின் மாட்சியால் - மயில் போன்ற சாயலை உடைய சீதையின் பெருமையால்; அயில் எயிற்று ஒரு குரங்கு ஆய் - கூரிய பற்களை உடைய ஒரு குரங்கின் வடிவமாய்; எயில் உடை திருநகர் சிதைப்ப எய்தினன் - மதில்களை உடைய இந்த அழகிய இலங்கை நகரை அழிக்க வந்து அடைந்துள்ளான்; என்பார் பலர் - என்று பல அரக்கர்கள் கூறுவாராயினர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "The god of Kailāsa with the peerless axe,
  2. moved by the greatness of the chastity of peacock-graceful Cītai,
  3. has come to lay waste this fair walled city
  4. in the form of a sharp-fanged monkey," said many.

What the poem says

Other guesses: many in the crowd believe the monkey is Śiva himself, the axe-bearing god of Mount Kailāsa, who has taken monkey form to destroy Ilaṅkai because of the power of Cītai's chastity.

They are closer to the truth than they know, since Aṉumaṉ is traditionally held to be a portion of Śiva.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kayilaiyiṉ oru taṉik kaṇicci vāṉavaṉ
mayil iyal cītaitaṉ kaṟpiṉ māṭciyāl
eyiluṭait tirunakar citaippa eytiṉaṉ
ayil eyiṟṟu oru kuraṅku āy;' eṉpār palar.