கம்பராமாயணம் 582 · பால 10.30
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தன் நேர் இல்லா - தன் தனக்கு உவமையாகும் பொருளைப் பெறாத, மங்கையர் - தோழியர் பலர்; செங்கைத்தளிர் மானே - சிவந்த தளிர் போலும் கைகளை உடைய மான் போன்றவளே!; அன்னே - தாயே!; தேனே - தேன்போல் இனியவளே!; ஆர் அமிழ்தே - (பெறுதற்கு அரிய அமிர்தம் போன்றவளே; என்று - எனச் சொல்லி அழைத்து; அடிபோற்றி - அவளுடைய) அடிகளை வணங்கி, முன்னே முன்னே - (நடந்து செல்லக்கூடிய) முன்னிடங்களில்; மொய்ம்மலர் தூவி - அடர்ந்த பூக்களைக் கொண்டு வந்து தூவி; முறை சார - முறையே நிரம்பி நிற்க; (அந்த மலர்களின் மேல்); பொன்னே சூழும் - மகரந்தப்பொடி நிரம்பிய; பூவின் - (தூவப் பெற்ற) அந்தப் பூவிலே; ஒதுங்கிப் பொலிகின்றாள்- நடந்து (சீதை) விளங்குகின்றாள்.
சீதையின் மென்மை: தோழியர் சீதையின் அடிகளைப் போற்றி மலர் தூவி நிற்க, அம்மலர்களின் மேல் அச்சீதை தன் அடிகளை வைத்து நடக்கின்றாள் என்பதால் அவளது மென்மை புலனாகும். 'அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்' - குறள் 1120 ஒப்பு நோக்கத்தக்கது. முன்னே பின்னே - அடுக்கு. தொறுப் பொருளுடையது (ஊர்தொறும்).
ஆங்கிலம் · English translationAI
Translation
- As matchless maidens praised her feet — 'Doe with hands red as tender shoots!
- Mother! Honey! Precious nectar!' —
- strewing thick flowers before her, step after step, in due order,
- she steps lightly onto those gold-dusted blossoms, and shines.
What the poem says
Cītai's companions, themselves of unmatched beauty, call her by loving names: doe, mother, honey, nectar. They scatter flowers in front of her at every step, and she walks on the soft, pollen-covered petals. This shows how delicate her feet are. The commentary recalls a Tirukkuṟaḷ couplet in which even the anicham flower and swan's down feel like thorns to the beloved's feet.