கம்பராமாயணம் 583 · பால 10.31

Section பால காண்டம் / 10. மிதிலைக் காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன்சேர்- பொன்னாலாகிய, மென்கால் கிண்கிணி - மெல்லிய பாதங்களில் அணிகிற சலங்கைகளையும்; ஆரம் - இரத்தின மாலைகளையும், புனை ஆரம் - சூடக்கூடிய பூமாலைகளையும், கொன்சேர் அல்குல் மேகலை - பெருமை மிக்க இடையில் அணியும் மேகலை என்னும் அணிகலனையும்; தாங்கும் - அணியும்; கொடி அன்னார் - பூங்கொடி போன்ற தோழியர் பலர்; தன்சேர் கோலத்து - தன்னிடம் பொருந்திய வடிவத்தின்; இன்னெழில் காண - இனிய அழகை ஆசையோடு பார்த்து நிற்க; சதகோடிமின் - (அவர்களின் இடையிலே) நூறுகோடி மின்னல்கள்; சேவிக்க - (சுற்றிலும் இருந்து வணங்கிப் பணி செய்ய; மின் அரசு என்னும்படி - (அவற்றுக்கு இடையே நின்ற ஒரு) மின்னல்களுக்கு அரசு என்று கருதுமாறு; நின்றாள் - (சீதை) நின்று கொண்டிருந்தாள்.

பெண்களும் விரும்பும் சீதையின் அழகு என்பது 'கொடியன்னார் தன்சேர் கோலத்து இன்னெழில் காண' என்னும் அடியால் பெறப்படுகிறது. மின் சேவிக்க.... நின்றாள்: தற்குறிப்பேற்ற வணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Wearing golden anklet-bells on soft feet, necklaces of gems, garlands of flowers,
  2. and girdles on their great hips, maidens slender as creepers
  3. gazed at the sweet beauty of her form; and as a hundred crore
  4. lightnings attended her, she stood like the queen of lightnings.

What the poem says

Cītai stands among her companions, slender girls adorned with anklets, necklaces, garlands and girdles. Even they gaze at her in admiration, which shows that her beauty charms women as well as men. They are like countless flashes of lightning paying court to her, and she is the queen of lightning in their midst.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1poṉ cēr meṉ kāl kiṇkiṇi āram, puṉai āram,
koṉ cēr alkul mēkalai tāṅkum koṭi aṉṉār,
taṉ cēr kōlattu iṉ eḻil kāṇac, cata kōṭi
miṉ cēvikka, miṉ aracu eṉṉumpaṭi niṉṟāḷ.