கம்பராமாயணம் 5821 · சுந்தர 13.17
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீரிடை கண்துயில் நெடிய நேமியும் - திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பெரிய சக்கராயுதத்தை உடைய திருமாலும்; தார் உடை தனிமலர் உலகின் தாதையும் - தாமரை மலர் மாலை அணிந்து உலகத்தைப் படைத்தவனான பிரம்மதேவனும்; பகைத்து - அரக்கர்களோடு பகைமை கொண்டு; ஓர் உடல் கொண்டு உருவம் மாற்றினர் - சேர்ந்து ஓர் உடலைத்தாங்கி, தமது வடிவை மாற்றிக் கொண்டவர்களாய்; பாரிடை புகுந்தனர் - நிலவுலகத்தில் வந்து பிரவேசித்துள்ளார்; என்பார் பலர் - என்று கருதினர் பல அரக்கர்கள்.
பிரம்மாவும் திருமாலும் தாமான தனித்தனி நிலையில் அரக்கர்களை அழிக்கும் வலிமையற்றவர்களாய், ஒன்று ஆகிக் குரங்கின் வடிவில் வந்தனர் எனக்கருதினர் பலர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "He of the great discus who sleeps upon the waters,
- and the father of the world on his peerless, garlanded flower,
- have taken a single body between them, changed their forms,
- and come down into the world in enmity," said many.
What the poem says
Yet another theory: Viṣṇu, who sleeps on the ocean of milk, and Brahmā, the creator seated on his lotus, could not destroy the demons separately, so they have merged into one body and come to earth as this monkey.