கம்பராமாயணம் 5822 · சுந்தர 13.18
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அரக்கரும் அரக்கியர் குழாமும் அல்லவர் - அரக்க ஆடவர் மகளிர்களுடைய கூட்டம் அல்லாதவர்களான தேவர் முதலிய அரம்பையர்கள்; நெடு மழை கண்ணின் நீர் கரக்கிலர் - நெடிய மழை போலும், (பெருகிய தம்) கண்ணீரை மறைக்காதவர்களாயினர்; அது - அவ்வாறு கண்ணீர் பெருகிய செயல்; விரை குழல் சீதை தன் மெலிவு நோக்கியோ? - நறுமணமுள்ள கூந்தலை உடைய சீதா பிராட்டியின் துன்பத்தைக் கருதியோ?; இரக்கமோ? - அனுமனுக்கு உண்டான துன்பத்தால் ஏற்பட்ட இரக்கத்தாலோ?; அறத்தினது எளிமை எண்ணியோ? - தருமத்தினது, எளிமையைக் கருதியதனாலோ (நேர்ந்தது).
அரக்கர் யாவரும், அச்சம், வெறுப்பு சினம் ஆகியவை கொண்டிருக்க, தேவர் முதலியோர் இரக்கமும் துன்பமும் கொண்டிருந்தனர் என்று கூறப்பட்டது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Those who were neither demons nor of the throng of demon women
- could not hide the tears that rained from their long eyes; was it
- at the thought of the wasting of Cītai of the fragrant hair?
- was it pity? or was it the thought of how low Dharma had been brought?
What the poem says
While the demons feel fear, hatred and anger, the captive women of other races cannot hold back their tears.
The poet wonders why they weep: for Cītai's suffering, out of pity for the bound Aṉumaṉ, or at the sight of righteousness itself so humbled.