கம்பராமாயணம் 5824 · சுந்தர 13.20
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எந்தையது அருளினும் - என் தந்தையான வாயுதேவனது கருணையினாலும்; இராமன் சேவடி சிந்தை செய் நலத்தினும் - இராமபிரான் சிவந்த திருவடிகளை யான் தியானம் செய்யும் புண்ணியத்தாலும்; சீதை, வானவர் தந்துள வரத்தினாலும் - சீதா பிராட்டியும் தேவர்களும் கொடுத்துள்ள வரங்களினாலும்; தறுகண் பாசமும் சிந்துவென் - கொடிய இந்தப் பிரம்மாத்திரத்தையும் அற்றி சிதறிவிடச் செய்யவல்லேன் யான்; அயர்வுறு சிந்தை சீரிது - (ஆயினும்) இதனால் நான் களைப்புற்ற மனத்தோடு இருப்பதே சிறப்புடைத்தாகும்.
“அயர்வுறு சிந்தை சீரிது” என்றதன் காரணம் அடுத்த நான்கு கவிகளில் விளங்கும். அதற்காகத்தான், அனுமன், அரக்கர்கள் தன்னைக் கட்டி ஈர்த்துச் செல்ல அடங்கியிருந்தான், என்பதாம். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "By the grace of my father, by the merit of meditating
- on Irāmaṉ's red feet, by the boons that Cītai and the gods
- have granted me, I could scatter even this cruel noose;
- yet to keep a mind that seems to yield is the better way."
What the poem says
Aṉumaṉ reflects that, thanks to his father the Wind god, his devotion to Irāmaṉ and the boons given by Cītai and the gods, he could break even Brahmā's noose.
But it is wiser to appear defeated. The next four verses spell out why he lets the demons drag him along.