கம்பராமாயணம் 5825 · சுந்தர 13.21
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வளை எயிற்று அரக்கனை உற்று - வளைந்த பற்களை உடைய அரக்கனாகிய இராவணனை அடைந்து; மந்திரத்து அளவுறு முதியரும் அறிய - ஆலோசனைச் சபைக்கு உரியராக அளந்து குறிப்பிடப்பட்ட முதியோர்களும் அறியும்படி; ஆணையால் விளைவினை விளம்பினால் - இராமபிரான் கட்டளைப் படி, மேல் நிகழக்கூடிய செயல்களை நான் எடுத்துக் கூறினால்; இளகினன் - (இராவணன்) மனவுறுதி குலைந்து நெகிழ்ந்து; மிதிலை நாடியை என் வயின் ஈதல் ஏயும் - மிதிலை நாட்டவளான சீதையை என்னிடம் கொடுத்து விடக்கூடும்.
சிந்தைச் சீர்மையால் விளையக் கூடிய முதற் பயன் இது. சீதையைச் சிறை வீடு செய்தல். ஆல் - ஈற்றசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "If I go before the curved-fanged demon and, so that the elders of his council
- may know it too, declare by my lord's command
- what is bound to follow, he may soften, and the lady of Mithilā
- he may well hand over to me."
What the poem says
The first advantage Aṉumaṉ sees in letting himself be taken: in front of Irāvaṇaṉ and his elder counsellors he can deliver Irāmaṉ's message and warn of what will happen.
Irāvaṇaṉ might then relent and release Cītai, the princess of Mithilā, into his care.